• Breaking News

    அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா அறந்தாங்கி எல்என்புரத்தில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் தலைவர் அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது.

    ரோட்டரி மண்டல ஒருங்கிணைப் பாளர் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய் ஆகியோர் முன்னிலையில் மருத்துவர் செல்லசெந்தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மருத்துவர் தினேஷ் ராஜா மற்றும் மருத்துவ ஆசிரியர் அனுராதா விஜய் ஆகியோர் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றி ஊட்டச்சத்து உணவு வழங்கினார்கள்.

     அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக வைரிவயல் அங்கன்வாடி மையத்திற்கு 15 ஆயிரம் மதிப்புள்ள குடி தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. இறுதியாக பொருளாளர் முனைவர் முபாரக் அலி அனைவருக்கும் நன்றி கூறினார். சங்க திட்ட இயக்குனர் ஜீவா சீனி, விஜயக்குமார், ராஜா, சீனிவாசன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    No comments