பிரிட்ஜை திறந்த குழந்தை மின்சாரம் தாக்கி பலி
சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி பகுதியில் கவுதம், பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், அதில் ரூபாவதி(5) என்பவர் இவர்களது மூத்த குழந்தை, தனியார் பள்ளியில் 1-ம் படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று குழந்தை ரூபாவதி வீட்டில் இருந்த பிரிட்ஜை திறந்து உள்ளார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியத்தில் ரூபாவதி மயங்கி கீழே விழுந்தார்.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ரூபாவதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ரூபாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments