வந்தே பாரத் ரயிலில் வெடித்த போன்..... அதிர்ச்சியான பயணிகள்....
சென்னையில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சி11 பெட்டியில் திடீரென சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியடைந்து என்னவென பார்த்த போது குஷ்நாத்கர் என்பவர் சார்ஜ் போட்ட மொபைல் போன் வெடித்து புகை வந்தது தெரிந்தது. இதனையடுத்து பயணிகள் கூச்சலிட்டதால் ரயில், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் சரி செய்த பிறகு, அரைமணி நேரம் தாமதமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரு கிளம்பிச் சென்றது.
No comments