தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் இனிப்புகள் விற்பனையகத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிதிக்காக ஒரு நாள் மொய் விருந்து - MAKKAL NERAM

Breaking

Monday, August 19, 2024

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் இனிப்புகள் விற்பனையகத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிதிக்காக ஒரு நாள் மொய் விருந்து


கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்  400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உடமைகளை இழந்தும் சொத்துக்கள் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். 

 வயநாட்டில் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவும் வண்ணமாக கேரள மாநிலத்தில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலமான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை சாலையில் உள்ள ராயல் ஸ்வீட்ஸ் & பேக்கரி என்ற நிறுவனத்தினை அப்துல் கபூர்  என்பவர் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் வயநாடு மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இன்று தனது கடையில் விற்பனையாகும் பொருட்களுக்கான விற்பனைத் தொகை முழுவதையும் வயநாட்டு மக்களின் கஷ்டங்களை துடைக்கும் வண்ணமாக இருக்க வேண்டும் என்று கொடுப்பதற்காக முடிவு செய்தார். 

இதன் காரணமாக இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரையில் கடையில் நடைபெறும் விற்பனை தொகை முழுவதும் அங்கு வயநாட்டிற்கு என வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் நேரடியாக செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்.கடையில் விற்பனையாகும் விற்பனை தொகையை மட்டுமல்லாது வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் தங்களால் முடிந்த தொகையையும் செலுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். 

மேலும் இன்று ஒரு நாள் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பளத்தினை வயநாடு நிதிக்காக வழங்குவதற்கு முன் வந்துள்ளனர். அதேபோன்று இன்று இந்த கடைக்கு பால் விற்பனை செய்யும் விற்பனையாளர் இன்று ஒருநாள் கடைக்கு வழங்கக்கூடிய பாலினை இலவசமாக தந்துள்ளார். இறுதியாக இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் விற்பனை தொகை முழுவதையும் ஒன்று சேர்த்து வயநாட்டிற்கு நேரடியாக சென்று வழங்க உள்ளனர். 

இது குறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில் வயநாட்டில் ஏற்பட்ட இந்த பேரழிவு என்பது யாராலும் நினைத்துப் பார்க்கக் கூடிய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து வயநாட்டு மக்கள் மீண்டு வருவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை இதனை அறிந்த சின்னமனூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் காலை முதலே ஏராளமான கடைக்கு வருகை புரிந்து தங்களால் முடிந்த நிதியினை வழங்கி வருகின்றனர் மேலும்  வணிகர்கள் சிலர் பொருட்களாகவும் கொண்டு வந்து கொடுத்து வருகின்றனர்.இதேபோன்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment