பழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஸ்ரீ வித்யாவின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர் அதே நபர் அரிமாநகரில் ராமாத்தாள் என்ற மூதாட்டியிடம் மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்தார். மூதாட்டி கூச்சலிடவே அந்த நபரை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழனி நகர் பகுதியில் போலீஸார் ரோந்து இருந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment