புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. சங்க தலைவர் அப்துல் பாரி தலைமையில் திட்ட இயக்குனர் மருத்துவர் செல்ல செந்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் துணை ஆளுநர் மருத்துவர் விஜய் முகாமை துவக்கி வைத்து உரையாற்றினார்.
பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என 100 பேருக்கு பல் மருத்துவ நிபுணர் சரவணன் மருந்து மாத்திரைகளை வழங்கி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை செய்தார். முன்னதாக செயலாளர் ஆண்டோ பிரவின் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் முன்னாள் செயலாளர் முகமது இப்ராம்ஷா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment