காமராஜரை பற்றி தவறாக பேசிய யூடியூபரை கைது செய்யவில்லை என்றால் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்..... தமிழ்நாடு நாடர் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் பேட்டி - MAKKAL NERAM

Breaking

Sunday, August 4, 2024

காமராஜரை பற்றி தவறாக பேசிய யூடியூபரை கைது செய்யவில்லை என்றால் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்..... தமிழ்நாடு நாடர் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் பேட்டி


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களை பற்றி இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்த பிரபல யூடிபர் பாண்டியன் என்பவர் தனது ஐந்தாம் தமிழர் சங்கம் என்கின்ற முகநூல் மற்றும் யூடியூபில் காமராஜரை பற்றி இழிவுபடுத்தும் வகையில் வீடியோவை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் தலைமையில், கூடுவாஞ்சேரி நாடார் சங்க நிர்வாகி பீட்டர் மற்றும் ஊரப்பாக்கம் நாடார் சங்க நிர்வாகி வைகுண்டராமன் ஆகியோர் கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.. 

புகார் அளித்துவிட்டு தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் பச்சைத்தமிழன் காமராஜரை தெலுங்கன் என்று கூறி பிரபல யூடிபர் பாண்டியன் என்பவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் எனவே இது போன்ற சமூகவிரோதிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் அவரை விரைவில் கைது செய்யவில்லை என்றால் சென்னை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என பகிரங்கமாக தெரிவித்தார்.

சுமார் 50க்கும் மேற்பட்ட. ஊரப்பாக்கம் மற்றும் கிடுவாஞ்சேரி நாடர் சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment