மயிலாடுதுறை: தமிழக அரசை கண்டித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 25, 2024

மயிலாடுதுறை: தமிழக அரசை கண்டித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்


கடந்த ஓராண்டு காலமாக சிறு சிறு பிரச்சனைகளை காரணம் காட்டி தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்வது இடமாறுதல் செய்வது ஆகியவற்றை கண்டித்து இன்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருப்பு பட்டையை அணிந்து பணி செய்தனர். 

தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் தலைமை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். ஏராளமான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment