அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 4, 2024

அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 48வது நாள் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

இதில் பெரியமாடு, சின்னமாடு, புதுப்பூட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை,   தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.

 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசும் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இந்த போட்டிக்கு நாகுடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment