சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினி - MAKKAL NERAM

Breaking

Friday, October 4, 2024

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினி

 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்.,30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் இருந்தது.

இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சையில் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து இன்று(அக்.,04) அவர் வீடு திரும்பினார்.

No comments:

Post a Comment