நாகையில் உலக அயோடின் குறைபாடு நீக்கல் தினம் அனுசரிப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 22, 2024

நாகையில் உலக அயோடின் குறைபாடு நீக்கல் தினம் அனுசரிப்பு

 


உலக அயோடின் குறைபாடு நீக்கல் தினம் நேற்று ( 21.10.24 ) நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகப்பட்டினம் ஜெ.ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஹென்னா பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 

நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் வரவேற்புரையாற்றினார். உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ்  சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் அயோடின் குறைபாடு காரணமாக மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதனை போக்க அயோடின் கலந்த உப்பை மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அயோடின் கலக்காத உப்பை மனித உணவாக விற்பனை செய்வதை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 தடை செய்துள்ளது. மீறி விற்பனை செய்பவர்கள் மேற்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 150 மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். இறுதியாக திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எஸ்.ஆண்டனிபிரபு நன்றியுரையாற்றினார். 

மக்கள் நேரம் எடிட்டர் & நாகை மாவட்ட நிருபர்

ஜீ.சக்கரவர்த்தி

9788341834

No comments:

Post a Comment