60 வயசு மூதாட்டிக்கு மது கலந்த ஜூஸ் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் - MAKKAL NERAM

Breaking

Sunday, November 17, 2024

60 வயசு மூதாட்டிக்கு மது கலந்த ஜூஸ் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்

 


சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் 60 வயசு மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் பொதுவெளியில் படுத்து தூங்குவதை இரவில் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் மூதாட்டி வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். 

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் 32 வயதான விக்னேஷ் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதாவது தான் பணிபுரியும் இறைச்சி கிடைக்க அருகே மூதாட்டி படுத்து தூங்கிய நிலையில் அவருக்கு மது கலந்த ஜூசை வாலிபர் கொடுத்தார். பின்னர் அந்த மூதாட்டியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விக்னேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment