தூத்துக்குடி: அரசு அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்.... மின்வாரிய பொறியாளர் கைது.... - MAKKAL NERAM

Breaking

Sunday, November 17, 2024

தூத்துக்குடி: அரசு அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்.... மின்வாரிய பொறியாளர் கைது....

 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கண்ணன் என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சாத்தான்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் பணிபுரியும் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் அந்த அலுவலகத்தில் கண்ணன் மற்றும் இளம் பெண் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனை அவர் பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.  அந்த இளம் பெண் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும் அரசு அலுவலகத்தில் வைத்து இளம் பெண் ஒருவரை ஊழியர் சீரழிக்க முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment