• Breaking News

    கம்பம்: ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது


    தேனி மாவட்டம் கம்பத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் நூதன ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஐப்பசி மாதம் 21 ஆம் நாள் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த கும்பாபிஷேக விழாவிற்கான முதல் நாள் யாகசாலை பூஜை நடைபெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை 17 11 2024 காலை 8:20 மணிக்கு யாத்திர தனம் கடம் புறப்படுதல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி சன்னதியின் விமான கோபுர கலசத்திற்கு மகா ஷம்ப்ரோஷணம் எனும் கும்பாபிஷேக (குடமுழக்கு) நடைபெற்றது.

     இதில் கருட தரிசனத்துடன் நடைபெற்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு விசேஷ திருவாராதணம் சாற்று முறை கோஷ்டி பிரசாதம் படைக்கப்பட்டு விழா வெகு விமர்சையாக நிறைவுற்றது. கோவில்களில் வண்ண விளக்குகள் ஜொலிக்க காலை சரியாக ஒன்பது முப்பது மணி அளவில் கோபுரத்தை இரண்டு முறை கருடர்சுற்றி வந்ததைக் கண்ட பக்தர்கள் ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா.ராமகிருஷ்ணன்,தேனி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், பிரமளைக் கள்ளர் சமுதாய தலைவர் ஓ.ஆர். நாராயணன், தேனி மாவட்ட இந்து சமய அறநிலைய துறை அறங்காவல் குழு உறுப்பினர் கே.ஆர். ஜெயபாண்டியன்,கம்பம் சிவமடம் ஏ.ஒன். ராமகிருஷ்ணன் கம்பம் தெற்கு, வடக்கு நகர் கழக செயலாளர்கள் எம்.சி வீரபாண்டியன் பால்பாண்டி ராஜா மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     இந்த விழா நிறைவுற்றவுடன் மகா அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதானத்திற்கான ஏற்பாட்டினை பாலாஜி பட்டாச்சாரியார் என்ற நாராயண ஐயங்கார் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் கிருஷ்ணாலயா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    No comments