கலைஞர் பெயரை வைக்காமல் கரப்பான் பூச்சியின் பெயரையா வைக்க முடியும் - உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டிருக்கும் பெரம்பலூர் எம்பி கேஎன் அருண் நேருவின் அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது, கலைஞரின் கொள்கைகளை லட்சியங்களை ஒவ்வொரு தொகுதிகளும் கொண்டு சேர்க்கிறோம். எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைப்பதா என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் கரப்பான் பூச்சியின் பெயரையா வைப்பது? நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும் என பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசும்போது அரசு திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரை வைக்காமல் கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்கள் பெயரை வைக்க வேண்டுமா என பழனிச்சாமியை விமர்சித்தது குறிப்பிடத்தக்கதாகும். இப்போதும் உதயநிதி மறைமுகமாக கரப்பான் பூச்சி என்ற பெயரில் குறிப்பிட்டு எடப்பாடி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments