• Breaking News

    நாகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

     


    நாகை மாவட்டத்தில் இன்று திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.அப்போது மாவட்ட எல்லையான புத்தூர் ரவுண்டா பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்பு கட்சி நிர்வாகி மனோகரன் இல்ல திருமண விழாவில் கலந்துக்கொண்டு பின்பு நாகை அவுரித்திடலில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணஙகள் வழங்கினார்.

    அப்போது அமைச்சர்கள் கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆவடி நாசர்,மாவட்ட செயலாளர் கௌதமன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா, சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

    மக்கள் நேரம் எடிட்டர் & மாவட்ட செய்தியாளர்

    ஜீ.சக்கரவர்த்தி

    விளம்பர தொடர்புக்கு

    9788341834

    No comments