ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பயங்கர தாக்குதல்..... 15 பேர் பலி - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 25, 2024

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பயங்கர தாக்குதல்..... 15 பேர் பலி

 


ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நள்ளிரவில் நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இன்னும் பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் ஆப்கானிஸ்தான் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்று அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே இஸ்ரேல் பாலஸ்தீனம், ரஷ்யா உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment