திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.அதே போன்று அடி மாதம் கார்த்திகை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் கூடியது.
இந்நிலையில் கடந்த 64 நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலைத்துறை வேலூர் மாவட்ட உதவி ஆணையர் சங்கர்,கோயில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள்,மற்றும் பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 64 நாட்களில் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூபாய் 86 லட்சத்து 49 ஆயிரத்து 809 ரூபாயும்,தங்கம் 70கிராமும்,வெள்ளி 8கிலோ 500 கிராமும் வெளிநாட்டு கரன்சி ஆகியவை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.
No comments:
Post a Comment