குத்துக்கல்வலசையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார்.
தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சி, கே.ஆர்.காலனி 11 வது தெருவில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இச்சாலையினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment