ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் அணிகள் கலந்துகொண்ட தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்சி கிளஸ்டர் வில்வித்தை போட்டியில் கும்மிடிப்பூண்டி மதன்லால் கேமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தவுஷிகா தஸ்னீம் 17 வயது உட்பட்ட இந்திய வில்வித்தை பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தினார்.
கவரப்பேட்டை ஆர் எம் கே பாடசாலா பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி வர்ஷினி பிரகாஷ் அவர்கள் 17 வயதுக்கு உட்பட்ட இந்திய வில்வித்தை பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினார்.
மற்றும் பெண்கள் அணி பிரிவில் சி.தவுஷிகா தஸ்னீம் ஆர்.ரஞ்ஜனி மற்றும் இ.எஸ்.தரங்கினி ஆகியோர்கள் 17 வயதுக்குட்பட்ட இந்திய வில்வித்தை பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு இவர்கள் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த குயிக் ஸ்பேரோ ஆர்ச்சிரி அகாடமி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களது பயிற்சியாளர் ச.கோபாலகிருஷ்ணன் அவர்களை கும்மிடிப்பூண்டி மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment