ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்..... நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, December 19, 2024

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்..... நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

 


ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலவு குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் 2026 சட்டசபை தேர்தல் தான் நமது இலக்கு. இடைத்தேர்தல் குறித்து கவலைப்பட வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சிக்குள் எந்த சலசலப்பும் இல்லாமல், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு முழுவதையும் சுற்றுப்பயணம் பூத் கமிட்டி என கட்சியை பலப்படுத்த விஜய் பல திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது. பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment