திருவள்ளூர் பூண்டி நீர் தேக்கத்தின் உபரி நீர் நிறுத்தம் - MAKKAL NERAM

Breaking

Thursday, December 19, 2024

திருவள்ளூர் பூண்டி நீர் தேக்கத்தின் உபரி நீர் நிறுத்தம்


சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.மழை நின்று ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்வளத் துறையினர் நடவடிக்கை.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அதில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.கடந்த 12ஆம் தேதி வினாடிக்கு 1000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக நீர்வரத்தை பொறுத்து வினாடிக்கு 16,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் மழை நின்று நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது.நேற்று வினாடிக்கு 500 கன அடி என்ற வீதத்தில் குறைக்கப்பட்ட உபரி நீர் இன்று வினாடிக்கு 2000 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் முற்றிலுமாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2650 மில்லியன் கன அடி நீர்இருப்பு உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 33.45 அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment