கேரளா: கோட்டைக்குள் புதையல் எடுப்பதற்காக குழி தோண்டிய 5 பேர் கைது - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

கேரளா: கோட்டைக்குள் புதையல் எடுப்பதற்காக குழி தோண்டிய 5 பேர் கைது



 கேரளாவில் காசர்கோடு கும்ப்லா அரிக்கடி கோட்டை உள்ளது. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டைக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இந்த கோட்டையை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. 

கோட்டையில் மன்னர்கள் காலத்தில் பாதுகாக்கப்பட்ட புதையல் இருப்பதாக நீண்ட காலமாக ஊருக்குள் வதந்திகள் உலாவுகின்றன. இதை உண்மை என்று நம்புபவரும் உள்ளனர்.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் கோட்டைக்குள் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று சோதனை செய்தனர். உள்ளூர் மக்களைப் பார்த்ததும், இரண்டு பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால் உள்ளூர்வாசிகள் அவர்களைப் பிடித்து, கட்டி போட்டுவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 5 நபர்களை கைது செய்தனர். கோட்டை கிணற்றுக்குள் புதையல் இருப்பதாகவும் அதை தோண்டினால் எடுத்து விடலாம் என்றும் மொக்ரல்- புதூர் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் முஜீப் கம்பார் கூறியதாக, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, புதையல் தோண்ட முயன்ற பஞ்சாயத்து துணைத் தலைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment