தமிழகத்தில் பிப்ரவரி முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.... கட்டணங்கள் முழு விவரம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

தமிழகத்தில் பிப்ரவரி முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.... கட்டணங்கள் முழு விவரம்

 


ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்களில் உள்ள உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டிடி ஜாஹுர் ஹுசைன். இவர் ஆட்டோ மீட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வாடகை, வாகனங்களின் உதிரிபாகங்களின் விலை, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு மற்றும் ஆர்டிஓ கட்டணம் போன்ற பல்வேறு விலைவாசி உயர்வுகளால் பயணிகளிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

எனவே தமிழ்நாடு அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கும் வரையில் நாங்கள் புதிய கட்டணபடி ஆட்டோவில் கட்டணம் வசூலிக்க இருக்கிறோம். அதன்படி 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு கூடுதல் கிலோமீட்டருக்கு 18 ரூபாயும், காத்திருப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு 1.50 காசும் வசூலிக்கப்படும். இதனையடுத்து இரவு 11 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரையில் 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் இந்த புதிய கட்டண விதிப்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிப்ரவரி ஒன்னாம் தேதி முதல் ஆட்டோ கட்டணங்கள் உயரும் என்று தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 18 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பகலை விட இரவு நேரத்தில் 50% கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment