திருப்பரங்குன்றம் செல்ல மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலையில் இருக்கும் தர்காவில், ஆடு, கோழி பலியிடுவோம் என்று கூறி, இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கிளம்பிய நிலையில் போலீசார் அதற்கு தடை விதித்தனர்.எனினும், அவர்களில் சிலர், அசைவ உணவுகளை கொண்டு சென்று மலை உச்சியில் படிக்கட்டுகளில் வைத்து உண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.இந் நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments