யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் - MAKKAL NERAM

Breaking

Friday, January 17, 2025

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

 


நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சவுக்கு சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment