ஊர் மக்களே சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 14, 2025

ஊர் மக்களே சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்பு


மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்காவை சேர்ந்தது கிளியனூர் ஊராட்சி இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முகம்மது ஹாலித்.இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றி மக்களின அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து.மிகவும் எளிமையாக இருந்தவர். 

 இவரது பதவிக்காலம் முடிந்து சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி, ஊர் பொதுமக்கள்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர்.தி.மு.க ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளியனூர் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது ஹாலித் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.


No comments:

Post a Comment