தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 14, 2025

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 


அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர்.


உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.பின்னர் கரும்புகளை சுவைத்து, பொங்கல் விளையாட்டுகளை விளையாடி உற்சாகம் அடைந்தனர்.

நகரப் பகுதிகளில் குடியிருப்போர் சங்கங்களிலும், கிராமங்களில் ஊர் பொது இடங்களிலும் பொங்கல் முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன.



No comments:

Post a Comment