ஜமீன் பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி ஜமீன் பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் அவர்களின் 108ம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படிசெங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பல்லாவரம் பா இராஜப்பா அவர்களின் தலைமையில் 15வது வார்டு வட்ட கழகச் செயலாளர் இரா.நீலமேகம் ராஜப்பா அவர்களின் ஏற்பாட்டில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் 200 நபர்களுக்கு காலை உணவு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் நகர எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் கே.ஜெயசுந்தர், 15 வது வட்டக் கழக மேலமைப்பு பிரதிநிதி ஏ.பெருமாள், மகேந்திரன், 15வது வார்டு எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.மனோகரன், உதயகுமார், ஆர்.முரளி, 15வது வட்டக் கழக துணைச் செயலாளர் எஸ்.செல்வம், 15வது வட்டக் கழக மேலஅமைப்பு பிரதிநிதி சுரேஷ், வசந்த ராஜ், பா.உமாபதி, எஸ்.தண்டபாணி,15வது வட்டக் கழக அவைத்தலைவர் எஸ்.சரவணன், 15வது வட்டக் கழகப் பொருளாளர் ஆர்.அப்பு (எ) கிருபாகரன், 15வது வார்டு மகளிர் அணி செயலாளர் எம்.எழிலரசி, மாஸ்டர், ஜி.பிரபு, சங்கர், மோகன், ஏ.மதன், வி.ரஞ்சித், எஸ்.ஜெகதீஷ், ஆகாஷ், கோபால், திவாகர் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments