நாகை பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை தேவாலயத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Friday, January 17, 2025

நாகை பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை தேவாலயத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

 


நாகை பழைய கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டும் சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி புனித லூர்து அன்னை பங்கின் இளையோர் இயக்கம் அன்பியங்கள் சார்பாக பொங்கல் வைக்கப்பட்டு முன்னதாக ஆலயத்தின் பங்குத்தந்தை பேரருள் பன்னீர்செல்வம் பொங்கல் பானைகளை மந்திரித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.


மேலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது சிறுவர்களுக்கென பாட்டிலில் நீர் நிரப்புதல் போட்டி நடைபெற்றது. இதில் போட்டி போட்டு விளையாடி நடனமாடி அசத்தினர் மற்றும் பெரியவர்கள் என   பானை உடைத்தல் மற்றும் மகளிர்காண பில்லோ பாஸிங் என தனியே போட்டிகள் நடத்தப்பட்டன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பங்குத்தந்தை பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்கினார்.

 


இவ்விழாவினை பங்கின் உதவி பங்கு தந்தை மரிய பிரகாசம் மற்றும் புனித  டோமினிக் சாவியோ இளையோர்   இயக்கம் விழா குழுவினர் விழாவை வழிநடத்தினர் அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் எடிட்டர்

நாகை மாவட்ட நிருபர்

ஜி.சக்கரவர்த்தி 

விளம்பர தொடர்புக்கு :

செல்: 9788341834

No comments:

Post a Comment