மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108ஆம் பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவினை முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தேசமுத்து ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன் பங்கேற்று அதிமுக கட்சி கொடியேற்றி, எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் நகர செயலாளர் எஸ்.டி.டி.ரவி ஏற்பாட்டில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அதிமுக பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், நகர தலைவர் மு.க.சேகர், அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ்.எஸ்.சரவணன், வேலு, எம்.ஏ.மோகன், சரவணன் மோகன் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவ்வாறே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எல்.சுகுமாரன் ஏற்பாட்டில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்று கட்சி கொடியேற்றி, எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூரில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் தன்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் திரளான அதிமுகவினர் அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மோகன் சேதுபதி ஓடை ராஜேந்திரன் நாகலிங்கம் பிடிசி ராஜேந்திரன் சுசீலா பங்கேற்றனர். தொடர்ந்து எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
No comments