பொன்னேரி மீஞ்சூர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் நல திட்டங்களை திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் வழங்கினார்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை யெட்டி பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் கழக வளர்ச்சி பணிக்காக பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோன்று மீஞ்சூர் நகர கழக.அவைத்தலைவர் வழக்கறிஞர் மாரி ஏற்பாட்டில் புது கொடி கம்பம் அமைக்கப்பட்டு கேக் வெட்டி ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கி நல திட்டங்களை தொடக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் சிறுணியம் பாலராமன் இதில் முன்னாள் எம் எல் ஏ பொன் ராஜா மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் பட்டாபிராமன் மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் ராஜன் மீஞ்சூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அசோக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
No comments