முதலமைச்சர் போட்டோவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் நாசர் - MAKKAL NERAM

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 26, 2025

முதலமைச்சர் போட்டோவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் நாசர்

 


தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதாவது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாசர் சில சர்ச்சைகளில் சிக்கினார். அதாவது பொதுக்கூட்டத்தில் கல்லறிதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியதால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் நாசர் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக இறந்தவர்களுக்கு தான் புகைப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செய்வார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உயிரோடு இருக்கும்போதே மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அமைச்சர் நாசர் மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here