• Breaking News

    சென்னை: 5 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு.... அவசர அவசரமாக வெளியேறிய தனியார் நிறுவன ஊழியர்கள்


     சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டடம் அதிர்ந்ததாக கூறி அங்கிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். அதிர்வு காரணமாக பொதுமக்கள் சாலையில் ஒரே நேரத்தில் கூடியதால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் உண்மையாகவே நில அதிர்வா அல்லது வதந்தியா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments