தாம்பரம் மாநகர திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குரோம்பேட்டையில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் லட்சுமி ஆண்டாள் திருமண மண்டபத்தில் மாநகரக் கழக அவைத் தலைவரும் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில் மாநகர கழக நிர்வாகிகள் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மார்ச் 1ல் கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை மாநிலம் முழுவதும் எழுச்சி உடன் கொண்டாடுவது குறித்தும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தாம்பரம் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டல குழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாநகர துணைச் செயலாளர்கள் நரேஷ் கண்ணா, பொன் சதாசிவம், விஜயரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர் உடன் பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மாநகர அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments