• Breaking News

    ஆண்டார்குப்பத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு


    திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும் இங்கு முருகப்பெருமானின் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.

     சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆண்டார்குப்பம் ஆலயத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலும் பொன்னேரி தச்சூர் கூட்டுச்சாலை சாலையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது ஆண்டார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு செல்லும் சாலை மிகவும் குறுகளாக இருப்பதால் மாற்று வழியாக சின்னம்பேடு- பெரவள்ளூர் வழியாக ஆண்டார்குப்பத்திற்கு வருவதற்கு சாலை விரிவாக்க திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் வருகின்ற நாட்களில் முருகப்பெருமானின் விசேஷ தினங்களில் ஏராளமான மக்கள் இங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

     குறிப்பாக சித்திரை கிருத்திகை தினம் ஆண்டார்குப்பம் முருகப்பெருமானுக்கு விசேஷ தினம் என்பதால் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக நடைபெறும். இதனால் இந்த ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் இங்கு திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு ஏற்றார் போல் வாகனங்களை நிறுத்துவதற்கும் போக்குவரத்தை சரியான முறையில் பக்தர்கள் பயன்படுத்துவதற்கும் இப்பகுதி மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.அதன்படி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வாகன நிறுத்துமிடங்களை ஆய்வு செய்து அதனை விரிவாக்கம் செய்து பல வாகனங்களை அங்கு நிறுத்துவதற்கு திட்டமிடும் வகையில் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.அதன் பலனாக திட்டப் பணிகள் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஆண்டார் குப்பம் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.

     பின்னர் ஆலய நிர்வாகிகளிடமும் அப்பகுதி பொதுமக்களிடமும் இது குறித்து விவாதித்து சித்திரை கிருத்திகை திருநாளுக்குள் வாகன போக்குவரத்திற்கு ஏற்றார் போல் இடத்தை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு ஆலோசனை செய்தார். கிராம நிர்வாக அலுவலர் சசிகாந்த்,பரம்பரை அறங்காவலர் ராஜசேகரன் குருக்கள்,செயல் அலுவலர் மாதவன் மற்றும் பாலாஜி ஆகியோர் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர்.


    No comments