சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்..... நடிகை ரெஜினா கசாண்ட்ரா வருத்தம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 11, 2025

சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்..... நடிகை ரெஜினா கசாண்ட்ரா வருத்தம்

 


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நடித்து வெளிவந்த படம் 'விடாமுயற்சி'. கடந்தவாரம் திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது தனியார் செய்தி நிறுவனத்துக்கு ரெஜினா அளித்த பேட்டியில் கூறியதாவது, பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் கொடுக்கப்படுவதில்லை. பல பெரிய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிக மோசமாக எழுதப்பட்ட விதத்தால் ஏமாற்றமடைந்தேன்.

விடாமுயற்சியில் அஜித் குமார், மகிழ் திருமேனியுடன் பணிபுரிந்ததில் எனக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தை என்னைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என மகிழ் திருமேனி எனக்கு நம்பிக்கையாளித்தார். எனக்கு நியாயமாளிக்கும் ஒரு கதாபாத்திரத்தையே அவர் எழுதியிருப்பார் என நம்பினேன். ஒரு சிக்கலான கதாபாத்திரத்தை என்னால் நியாயப்படுத்த முடியும் என்று நம்பியதற்காக இயக்குநருக்கு நன்றி.

ஒரு படத்தின் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்தப் படத்தின் கதையையும், அதன் வலிமையையும் உணரலாம். அதனால் தான் நான் என் இயக்குநர்களை நம்புகிறேன். ஆனாலும் சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதனால் என்னிடம் சொல்லப்படும் ஒவ்வொரு கதையிலும், ஒரு தனித்துவத்தை உணர்ந்தால் மட்டும் தான் அதில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment