பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில் புதிய ரேசன் கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 11, 2025

பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில் புதிய ரேசன் கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது


பாவூர்சத்திரம்  செல்வ விநாயகர்புரம் வ. உ.சி நகரில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை  வகித்தார். துணைத்தலைவர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

குருசாமிபுரம் ஊர் பெரியவர் பால்நாடார், நாராயணன் ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். முதல் விற்பனையை ஓய்வு பெற்ற காவல் துணை ஆய்வாளர் இசக்கி தொடங்கி வைத்தார். இதில் ரேசன் கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment