வயநாட்டில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 11, 2025

வயநாட்டில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு


 கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள வனப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மளிகை பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து நேற்று மாலை திரும்பும் போது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடல் இன்று காலை வன்ப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவர் தமிழ்நாட்டின் ஒரு பழங்குடி குக்கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த நபர் காட்டு யானை தாக்கியதில்தான் உயிரிழந்தாரா?இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment