கள்ளக்காதல் மோகம்..... தட்டிக்கேட்ட கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி - MAKKAL NERAM

Breaking

Monday, March 17, 2025

கள்ளக்காதல் மோகம்..... தட்டிக்கேட்ட கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

 


பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் மிதிலேஷ் பாஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியங்கா தேவி என்ற மனைவி இருக்கிறார். இதில் பிரியங்கா வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அவர் தன்னுடைய கள்ளக்காதலுடனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதனை பார்த்து அவருடைய கணவர் கண்டித்துள்ளார்.

 இதனால்  கோபம் அடைந்த பிரியங்கா தன் கணவனை கத்தியால் தாக்கினார். அதோடு தன் கணவனின் பிறப்புறுப்பை அவர் கத்தியால் அறுத்தார்.இதில் அதிக ரத்தப்போக்கு வெளியேறிய நிலையில் அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஹாஸ்பிடலுக்கு செல்வதற்கு முன்பாகவே அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார். 

மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பிரியங்காவை போலீசார் கைது செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இந்த விவகாரத்தில் அவருடைய கள்ளக்காதல் எனக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment