ரூட் மாறும் தேமுதிக..... விரிவான தகவல்கள் - MAKKAL NERAM

Breaking

Monday, March 17, 2025

ரூட் மாறும் தேமுதிக..... விரிவான தகவல்கள்

 


தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று கூறி வருகிறார்.

 இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் நிலையில் சமீப காலமாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது பட்ஜெட்டை மனமார வரவேற்பதாக கூறியுள்ளார்.

அவர் பட்ஜெட்டை வரவேற்பதாக கூறியது மட்டுமின்றி மாநிலங்களவை தொகுதி பிரிப்பது தொடர்பாகவும் ஆளும் மக்கள் கட்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக தேர்தலுக்கு முன்பாக தேமுதிக திமுக கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

1 comment:

  1. விரிவான தகவல் என்று சொல்லிவிட்டு. எந்த தகவலையும் காணோமே?

    ReplyDelete