தேவூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நான்கினிய விழா
நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீழ்வேளூர் வட்டாரக்கிளையின் சார்பாக நான்கினிய விழா தேவூர் ஜீவா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சாந்தி அவர்கள் தலைமையேற்க, மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டாரச் செயலாளர் அருள் முருகன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவானது காலை 10 மணியளவில் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைக்கப்பட்டது.
மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண் ஆசிரியர்களுக்கான இசை நாற்காலி போட்டி சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகளிர்கள் மட்டும் பங்கெடுத்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. 12 மணிக்கு துவங்கிய விழாவானது மாநில தலைவரும் மாவட்ட செயலாளருமான லட்சுமி நாராயணன் அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியரான சுடரொளி அவர்களுக்கு சிறப்புகள் செய்து, பாராட்டு தெரிவித்தார்.மாவட்ட தலைவர் கருணாநிதி அவர்கள் விருது பெற்ற ஆசிரியர்களான உஷாராணி, மகாலெட்சுமி, கோகிலா ஆகியோருக்கு பரிசளித்து பாராட்டு தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற முன்னாள் நகரச் செயலாளர் இளமாறன் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசளித்தார்கள். மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புரையாக விமலா, அந்தோணியம்மாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வேதாரண்யம்,நாகை வட்டாரம்,நகர கிளைகளில் இருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.120 நபர்களுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வானது மதியம் அறுசுவை உணவோடு நிறைவு பெற்றது. இறுதியாக வட்டார பொருளாளர் ஐயப்பன் அவர்கள் நன்றி கூறினார்.
No comments