கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் கும்பாபிசேகம்..... ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கீழப்பாவூர் ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாவூர்சத்திரம்அருகேயுள்ள கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 12ம்தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக நாளான காலை 7 மணிக்கு புண்யாக வாஜனம், நித்ய ஆராதனம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹ{தி, விசேஷ தானம், யாத்ரா தானம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரி வார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், விசேஷ ஆராதனை, சாத்துமுறை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ருக்மணி கல்யாணம், இரவு 8 மணிக்கு கருட சேவை யும் நடைபெற்றது.
இக்கும்பாபிசேகவிழாவில் டாக்டர்கள் தர்மராஜ், குணசேக ரன், ராஜசேகரன், அரிச்சந்திரராஜா, அழகேசன், கோதண்டராமன், சுந்தர், மகேஸ்வரி, நிகிலா, முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன், மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சேதுராமன், கணக்கர் பொன்னையா, ரவி பட்டாச்சாரியார் மற்றும் ஸ்ரீ ராம் பஜனை மண்டலியினர், ஸ்ரீ ஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தினர், பக்தர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
No comments