கோவில் திருவிழாவில் திடீரென மதம் பிடித்த யானை..... வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு.....
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் அருகே உள்ள கோயிலில் திருவிழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஊட்டோளி மகாதேவன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. இந்நிலையில் அந்த யானை திடீரென மதம் பிடித்து ஓடியது. இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
மேலும் அந்த யானை அருகில் இருந்த கார், பைக் போன்ற வாகனங்களை எல்லாம் நசுக்கி சேதப்படுத்தியது. பின்னர் பாகன் மற்றும் சிலர் சேர்ந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.
No comments