நலத்திட்ட உதவி வழங்க முதல்வர் வருகை தருவதை யொட்டி கும்மிடிப் பூண்டியில் விழா நடக்கும் இடங்களை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரி மைத் தொகை, விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்குதல், முதியோர் ஊக்கத்தொகை, ரேஷன் அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட் டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 6.ம் தேதி வருகை தர உள்ளார். இதில், கும்மிடிப்பூண்டி, சோழவரம் ஒன்றியங்க ளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்வதற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக நேற்று அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் கலெக்டர் பிரதாப் ஆகியோர் நேற்று காலை வந்திருந்தனர்.
அப்போது முன்னாள் மாவட்டச் செயலாளரும் எம், எல்,ஏவுமான டி.ஜெ. கோவிந்தராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாவட்ட போலீஸ் கண்காணிப் பாளர் சீனிவாசபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது ஆண்டார்குப்பம், கவரப்பேட்டை சத்திய வேடு சாலை, எளாவூர் செரியன் ஹாஸ்பிடல் ஆகிய 3 இடங்களை அமைச்சர் நாசர், கலெக்டர் ஆய்வு செய் தனர். ஆய்வின்போது அமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலிருந்தும் இந்த பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் இடம் தேர்வுசெய் யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அரசு வருவாய் அலுவ லர்கள், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், மாவட்டத் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி மாவட்ட கவுன்சிலர் கள், ஒன்றிய கவுன்சிலர் கள், ஒன்றிய செயலா ளர்கள் மணிபாலன், கி.வே. ஆனந்தகுமார். நா.பரிமளம் பா.செ.குணசேகரன் மாவட்ட பொருளாளர் ரமேஷ். திருமலை. நமச்சிவாயம் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment