சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்..... அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு - MAKKAL NERAM

Breaking

Monday, March 17, 2025

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்..... அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு

 


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டியை அழைத்துள்ளார். மேலும் பாஜக மற்றும் பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment