• Breaking News

    சட்டசபையில் செங்கோட்டையன் உள்ளே..... எடப்பாடி பழனிச்சாமி வெளியே.....

     


    அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமான சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறும் நிலையில் இன்று சட்டசபை கூட்ட தொடரின் போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை நடத்தினார். 

    இதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டு வந்துள்ள நிலையில் செங்கோட்டையன் சட்டசபையில் கலந்து கொண்டு பேசினார். செங்கோட்டையன் சட்டசபைக்கு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி வந்தால் செங்கோட்டையன் வெளியேறி விடுகிறார்.

    இதன் காரணமாக செங்கோட்டையனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார்,எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு என்பது நிலவும் நிலையில் இருவரும் என்ன பிரச்சனை என்பதை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. 

    அதே நேரத்தில் சட்டசபையில் செங்கோட்டையன் வந்தால் இபிஎஸ் வெளியேறுகிறார் இபிஎஸ் வந்தால் செங்கோட்டையன் வெளியேறுகிறார். இந்த சம்பவங்கள் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல்கள் தலை தூக்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    No comments