• Breaking News

    ஜார்க்கண்டில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

     


    சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், நக்சலைட்டுகள் பலரும் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதேவேளை, நக்சலைட்டுகள், பாதுகாப்புப்படையினர் இடையே அவ்வபோது துப்பாக்கி சண்டையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் போகரோ மாவட்டத்தில் லபனியா பகுதியில் உள்ள மலையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    No comments