கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் அரசுப் பள்ளியில் விளையாட்டு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, April 4, 2025

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் அரசுப் பள்ளியில் விளையாட்டு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது


ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் கோபால் தலைமை வகித்தார் மேலும் விழாவிற்கு முன்னிலையாக சண்முகப்பிரியா மற்றும்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் வரவேற்புரை வழங்கினார்.

மேலும் விழாவிற்கு முன்னாள் மாணவர்  திருவேங்கடசாமி பத்துக்கும் மேற்பட்டமாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை அன்பளிப்பாக வழங்கினார்.இவ்விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாண்மை குழுஉறுப்பினர் மணிமேகலை செய்திருந்தார்.

 பள்ளியின் உதவி ஆசிரியர் தமயந்தி விழாவிற்கு நன்றி உரையாற்றினார்.2025- 2026 ஆம் கல்வியாண்டின் பள்ளியை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பள்ளியில் சேரும் ஒரு மாணவருக்கு இரண்டு செட் உடற்கல்வி கல்வி சீருடை வழங்கப்படும் என பள்ளியின் தலைமைஆசிரியர் அறிவித்துள்ளார். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment