பெருங்களத்தூரில் நடைபெற்ற இந்தியன் நேஷனல் டேலண்ட் ரிசோர்ஸ் ஒலிம்பேட் தேர்வில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பெருங்களத்தூரில் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் இயக்குனர் சீமாபோப்பனா மற்றும் தமிழ்நாடு நிறுவன மேலாளர் ஹரிபாபு அவர்கள் தலைமையில் பள்ளி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ சைதன்யா பள்ளியில் நடைபெற்ற இந்தியன் நேஷனல் டேலண்ட் ரிசோர்ஸ் ஒலிம்பேட் தேர்வில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா பள்ளி குழுமத்தில் தாம்பரம், பெரும்பாக்கம் பூந்தமல்லி கிளையில் பயிலும் 29 மாணவர்கள் சிறப்பு பரிசாக லேப்டாப் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து 67 மாணவர்களுக்கு டாப் பரிசுப் பொருட்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த சாதனை கொண்டாடும் வகையில் தாம்பரம் பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உதவி பொது மேலாளர் ஸ்ரீநிவாசலு, மாநில ஒருங்கிணைப்பாளர்துர்கா பிரசாந்த், மாநில துணை ஒருங்கிணைப்பாளர்திலீப், மண்டல தலைவர் திலக், தாம்பரம் பள்ளியின் முதல்வர் ராஜலட்சுமி வெங்கட், பெரும்பாக்கம் பள்ளி முதல்வர் வனிதா, பூந்தமல்லி பள்ளியில் முதல்வர் பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப் டேப் பதக்கமும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments